பண்டிகை காலம் வந்துவிட்ட நிலையில் பல்வேறு வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து கடன்களுக்கான செயல்பாட்டு கட்டணம் மற்றும் சேவை கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடன்களுக்கான வட்டி 6.80 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. கார் கடனுக்கான வட்டி 7.15 சதவீதத்தில் உள்ளது. தனிநபர் கடன், சொத்து கடன், பென்சன் கடன், நகை கடன் போன்ற அனைத்துக்குமான கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பர்சனல் லோன் 8.95 சதவீதம் கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் வீட்டுக் கடனில் டாப் அப் வசதியையும் பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. டிசம்பர் மாதம் வரையிலும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.