Categories
தேசிய செய்திகள்

லோன் வாங்க போறீங்களா…? அதுக்கு முன்னாடி இதெல்லாம் கட்டாயம்…!!!

பெரும்பாலும் நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கியில் தனிநபர் கடனாகவோ அல்லது நகைகளை அடகு வைத்தோ பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இப்படி தனிநபர் கடன் வாங்க முடிவு செய்து விட்டால் எவ்வளவு பணம் தேவை? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கடன் வாங்கும் வங்கியின் இணையதளத்தில் எவ்வளவு அளவு வரை கடன் வாங்க நமக்கான தகுதி இருக்கிறது என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெர்சனல் லோன் வாங்குவதற்கு நீங்கள் உங்களுடைய KYC மற்றும் வருமானம் தொடர்பான சில ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும். ஆனால் நகைக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றிற்கு கெலட்ரால் வேண்டும். இந்த வகையான லோன்கள் வாங்குவதற்கு ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் .ஆனால் பேர்சனல் லோன் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு கடனுக்கான ஒப்புதல் கிடைத்துவிடும்.  உங்களுக்கு கடன் கொடுப்பதற்கு முன்பாக உங்களுடைய சிபில் ஸ்கோர் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக உங்களுடைய தகுதி ஆகியவற்றை வங்கி தரப்பில் இருந்து மதிப்பீடு செய்யப்படும்.

பின்னர் உங்களுடைய வங்கிக் கணக்கில் முழு தொகையையும் செலுத்தப்படும். இவ்வாறு பர்சனல் லோன் பெறுவதற்கு வருமானம் சான்றாக தன்னுடைய சம்பளத்தின்  வருமானம் மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கை ஆகியவற்றைத் சான்றாக கொடுக்க வேண்டும். இது தவிர அடையாளச் சான்று, முகவரி சான்று ஆகியவை தேவைப்படும். சுயதொழில் செய்பவராக இருந்தால் அதற்கான சான்றையும் வழங்க வேண்டும்.

Categories

Tech |