பர்சனல் லோன் வாங்க எந்த வங்கியில் கம்மியான வட்டி மற்றும் செயல்பாட்டு கட்டணம் உள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்ளவும்.
தனிநபர் கடன் என்பது வங்கியில் குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான வகையில் கிடைக்கும் கடன் வசதி. இதற்காக கொலேட்ரல் எதையும் வழங்கத் தேவையில்லை. பர்சனல் லோன் வாங்க முடிவு செய்து விட்டால் எந்த வங்கியில் வாங்குவது என்பதை தேர்வு செய்ய வேண்டும். எங்கே வட்டி குறைவாக உள்ளது. செயல்பாட்டு கட்டணம் எவ்வளவு, உடனடியாக ஒப்புதல் கிடைத்துவிடுமா? என்பதை பார்க்க வேண்டும்.
அந்த வங்கியின் வெப்சைட்டிலேயே வட்டி உள்ளிட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். தற்போதைய நிலையில் இந்தியாவில் குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
வட்டி – 9.60% முதல் 15.65%
செயல்பாட்டு கட்டணம் – 1.50%
ஐசிஐசிஐ பேங்க்
வட்டி – 10.5% முதல் 19%
செயல்பாட்டு கட்டணம் – 2.25%
ஹெச்டிஎஃப்சி பேங்க்
வட்டி – 10.5% முதல் 21.00%
செயல்பாட்டு கட்டணம் – 2.50%
யெஸ் பேங்க்
வட்டி – 13.99% முதல் 16.99%
செயல்பாட்டு கட்டணம் – 2.50%
சிட்டி பேங்க்
வட்டி – 9.99% முதல் 16.49%
செயல்பாட்டு கட்டணம் – 3%
கோட்டக் மகிந்திரா பேங்க்
வட்டி – 10.25%
செயல்பாட்டு கட்டணம் – 2.5%
ஆக்சிஸ் பேங்க்
வட்டி – 12% முதல் 21%
செயல்பாட்டு கட்டணம் – வங்கியின் முடிவு
பேங்க் ஆஃப் பரோடா
வட்டி – 10.50% முதல் 12.50%
செயல்பாட்டு கட்டணம் – 2%
ஹெச்.எஸ்.பி.சி பேங்க்
வட்டி – 9.75% முதல் 15.00%
செயல்பாட்டு கட்டணம் – 1%
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்
வட்டி – 12% முதல் 26%
செயல்பாட்டு கட்டணம் – 3.5%
டாடா கேப்பிட்டல்
வட்டி – 10.99%
செயல்பாட்டு கட்டணம் – 2.75%