லோயர்கேம்ப் பகுதி அருகே உள்ள மங்கள நாயகி கண்ணகி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள பளியன்குடியில் மங்களநாயகி கண்ணகி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் மங்களநாயகி கண்ணகி தேவி அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் ஆதிசக்தி கருப்புசாமி, ஆதிசக்தி அன்னை கண்ணாத்தாள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் 61 பல்லயங்கள் இடப்பட்டு பூஜை நடைபெற்றது.
நள்ளிரவு கமலஜோதி லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று கிடாவெட்டி ஆதிசக்தி கருப்பனுக்கு படையல் இடப்பட்டது. இந்த விழாவில் லோயர்கேம்ப், கடலூர், நாயக்கர் தொழு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.