Categories
மாநில செய்திகள்

வஉசியின் 151-வது பிறந்தநாள்…. முதல்வர் நாளை மரியாதை…. வெளியான முக்கிய தகவல்….!!!!

வ.உ சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ சிதம்பரனாரின் உருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார். இந்த நிகழ்ச்சி நாளை காலை 9:30 மணி அளவில் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பிக்கள், முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து வ.உ சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் கப்பலோட்டிய தமிழன் படம் திரையிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் நாளை காலை 10 மணிக்கும், வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 10:30 மணி மற்றும் மாலை 2 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இந்த காட்சிகளை பார்ப்பதற்கு பொது மக்களுக்கு அனுமதி இலவசம்.

Categories

Tech |