வகுப்பறைக்குள் மாணவ மாணவியர்கள் கட்டியணைத்துக் கொண்டு மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் தெற்கு அசாம் பகுதியில் உள்ள ராமானுஜ குப்தா கல்வி நிறுவனத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் சில மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்துக் கொண்டு நெருக்கமாக தொட்டு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பரப்பியதாக கூறப்படுகின்றது. இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு மாணவியர், மூன்று மாணவர் என மொத்தம் ஏழு பேரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செயல் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க கோரி சம்பந்தப்பட்ட ஏழு பேருக்கும் பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து அந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் பூர்ணதீப் சந்தா தெரிவித்ததாவது “இந்த சம்பவம் மதிய உணவு இடைவெளியின் போது நடந்துள்ளது . அந்த நேரத்தில் ஆசிரியர்கள் யாரும் வகுப்பறையில் இல்லை. வகுப்பறையில் நாங்கள் சிசிடிவி வைத்துள்ளோம். வளாகத்திற்குள் செல்போன்கள் அனுமதி இல்லை. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் புதிதாக இங்கு சேர்ந்த மாணவர்களே. சஸ்பெண்டான மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் அல்லது கார்டியன் நேரில் வந்து விளக்கம் தருவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.