உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹர்தோய் என்ற பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர் தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடக் கூறியுள்ளார். இதையடுத்து நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருந்த ஆசிரியருக்கு அந்த மாணவன் மசாஜ் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அப்போது மற்ற மாணவ, மாணவியர் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். ஆசிரியைக்கு மாணவன் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங் தற்காலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.