5 வயது சிறுவன் வகுப்பறையில் பூட்டி வைக்கப்பட்டதால் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமையாசிரியராக ஊர்மிளா தேவி இருக்கிறார். இந்த பள்ளியில் படிக்கும் ஆதித்யா என்ற சிறுவன் (5) கடந்த 7-ம் தேதி வகுப்பறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் ஆதித்யா நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடிப் பார்த்ததில் சிறுவன் வகுப்பறையில் பூட்டி வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ஆதித்யாவின் பெற்றோர் கதவை உடைத்து தன்னுடைய மகனை வகுப்பறையில் இருந்து மீட்டனர். இது தொடர்பாக பள்ளியின் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு தலைமை ஆசிரியர் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறி அவரை பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் சுரேந்திர நாத், சாந்தி, மீரா தேவி, பிரியங்கா யாதவ், அப்ராஸ் அரா உள்ளிட்ட 5 ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவன் ஆதித்யா வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆசிரியர்கள் கவனிக்காமல் அவரை பூட்டி வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.