ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பிரிவில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது மாணவன் சேக் சஜிதாவிடம் ஆசிரியர் பாடம் சம்பந்தமாக கேள்வி கேட்டுள்ளார். அப்போது கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
ஆனால் சஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவன் இறப்பு குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர், வகுப்பு மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.