Categories
தேசிய செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்…. கனமழை பிச்சி எடுக்கும்…. கடும் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் புதிதாக புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக அந்தமான் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காற்றழுத்த தாளு மண்டலம் அடுத்த 72 மணி நேரத்தில் புயலாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் பிறகு வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதியை நோக்கி நகர்ந்து கரையை கடப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |