Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை… மீன்பிடிக்க தடை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டுள்ளது. எனவே கடலோர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள துறைமுகங்களில் 1000க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |