Categories
மாநில செய்திகள்

“வங்கக்கடலில்” குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை…. 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!!!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த வருடம் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நல்ல மழை கிடைத்தது. அப்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால் பல இடங்களில் புயல் உருவாகி கனமழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வருகிற 22-ஆம் தேதி வரை காரைக்கால், புதுவை மற்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது  புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புயலின் காரணமாக வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மார் பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |