Categories
தேசிய செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்……!!!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் ,தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் ,கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள்ள மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.

சென்னையில் நேற்று மாலை முதல் விடிய ,விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் மழை சற்று தணிந்தது விடப்பட்ட கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. அத்துடன் மிதமான மழை அடுத்து இரண்டு மணி நேரத்துக்கு தொடர வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இரவு முதல் லேசான மழை பெய்தது.

இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதியால், கேரளா , கர்நாடகாவில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |