தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டல சுழற்சி நிலவிவருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுமென்று இந்திய வானிலை ஆய்வு மையமானது தெரிவித்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
இதனால் நாளை முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நவம்பர் 11ஆம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்துவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.