Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்…. தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்ல…. வானிலை தகவல்….!!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று ஒடிசா-ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதியதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் வடக்கு மற்றும் தெற்கு ஒடிசாவின் பூரி மாவட்டம் இடையே கரையைக் கடக்கும். இதன் காரணமாக ஒடிசா – ஆந்திரா மாநிலங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

இதனால் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த புயல் சின்னம் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |