தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்து வந்த நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாகி இருப்பதாகவும் அது மீண்டும் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். ஒருவேளை “இது கணிக்கப்பட்ட படி புயலாக மாறினால் அந்த புயலுக்கு மாண்டஸ் என ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் சூட்டப்படும்”. வங்கக் கடலில் உருவாகும் புயல் எச்சரிக்கை காரணமாக திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், சென்னை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் 6 மாவட்டங்களுக்கு விரைந்து சென்றுள்ளனர்.