Categories
மாநில செய்திகள் வானிலை

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. குமரியை நோக்கி நகரும்…. புயலாக மாறுமா?

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். தென் தமிழகம், குமரி கடலை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். இந்த முன்னதாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடலில் உருவானது. அதனை தொடர்ந்து நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

இலங்கையுடைய திரிகோணமலையிலிருந்து 420 கிலோமீட்டர் கிழக்கு- வடகிழக்கு திசையிலும், நாகையிலிருந்து தெற்கு -தென்கிழக்கு திசையில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 690 கிலோமீட்டர் தென் கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு மேற்கு – தென்மேற்கு திசையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடலை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும், அதாவது இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலப் பகுதிக்கு மிக அருகே இது மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு குறைவு எனவும், இப்போதைக்கு அது தொடர்பான தகவல்களை தெரிவிக்கவில்லை. எனவே இது புயலாக மாறும் வாய்ப்பில்லை.. இலங்கையில் இருந்து குமரிக்கடல் பகுதிக்கு செல்லும் தென் தமிழகத்தை ஒட்டியுள்ள இடம் என்பதால் அந்த இடங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மாண்டஸ்  புயல் வரும்போது தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை இல்லை. கடலோர மாவட்டங்கள், அதேபோல வட கடலோர மாவட்டங்களில் கன மழை இருந்தது. ஆனால் இப்போது தென் தமிழகத்திற்கு பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இரு நாட்களுக்கு முன்பு வரை பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 42 சென்டிமீட்டர். அதேபோல் 42 சென்டி மீட்டர் இயல்பான அளவில் மழை பெய்துள்ளது..

இன்னும் ஒரு வாரத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் முடிவடைய உள்ளது. இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும், 2 காற்றழுத்த தாழ்வு மண்டங்கள் கடந்து சென்றது, மாண்டச் புயல் கடந்து சென்றது. மாண்டஸ் ஓரளவுக்கு தமிழகத்தில் மழையை கொடுத்தது. தற்போது மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடலை ஒட்டிய இடங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. எனவே அந்த பகுதிக்கு அவர்கள் செல்ல வேண்டாம். இது இலங்கையை நோக்கி வரும் என்பதால் இலங்கை கடலோர் பகுதிகளில் அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

Categories

Tech |