வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கிய முதலே உருவாகும் முதல் புயல் இது. இந்த புயலுக்கு அசானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அந்தமான் நிக்கோபர் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வருகின்றது .
இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில், புயலாக வலுப்பெற்று அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இரண்டு நாட்களுக்கு அதிக கனமழை பெய்யக்கூடும். மேலும் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.