வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக ஜடேஜா, யாஷ் தயாள் விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்..
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து நியூசிலாந்து தொடர் முடிவடைந்த பின் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கிறது.
தொடரின் முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியும், அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 7ஆம் தேதியும், டிசம்பர் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 22ஆம் தேதியும் தொடங்குகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்தது. கடந்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்தனர்.
அதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பிண்ட், ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயாள் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.. இந்நிலையில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயாள் ஆகியோர் விலகி இருக்கின்றனர்.. இவர்கள் இருவருக்கும் பதிலாக குல்தீப் சென் மற்றும் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோர் ஒரு நாள் தொடரில் இணைந்துள்ளனர். எனவே இரண்டு மற்றம் செய்யப்பட்டு ஒருநாள் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே ), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ஷபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்
வங்கதேச டெஸ்டுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (WK), கே.எஸ். பாரத் (WK), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல். , குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
#TeamIndia for Bangladesh ODIs: Rohit Sharma(C), KL Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, R Pant (WK), Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, W Sundar, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen.
— BCCI (@BCCI) November 23, 2022