வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக தீவிரமடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்காள தேசத்தில் கரையை கடந்திருக்கிறது அதாவது எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கரையை கடந்துள்ளது. இந்த நிலையில் புயல் கரையை கடந்ததில் வங்கதேசத்தில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இதனை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் கார்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வரும் 28,155 மக்களும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் காக்ஸ் பஜார் துணை ஆணையர் மாமூனூர் ரஷீத் தேவைப்பட்டால் கல்வி நிறுவனங்களை தாங்கும் இடங்களாக பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.