Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் கரையை கடந்த சிட்ரங் புயல்… ஐந்து பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் புயல் நேற்று மாலை கரையை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புயல் கரையை தொட்டதும் வலு விழுந்தது. இதன்பின் சிட்டகம் மற்றும் பரிசால் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சூறாவளிப்புயல் கரையை கடந்துள்ளது. சூறாவளி புயலால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது என அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய தலைவர் அபுல் கலாம் மாலிக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புயலால் கன மழை பெய்யும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர் இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்பிற்கு ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் புயல் கரையை கடந்த நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர்.

இந்த புயல் அந்த நாட்டின் தெற்கு பகுதியில் விரைவாக நகர்ந்து செல்கின்றது இதனால் வங்காள விரிகுடாவில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாக்கா நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்து இருக்கின்றது. இதனால் அந்த பகுதியில் சாலைகளில் கனமழையால் நீர் சூழ்ந்து காணப்படுகிறது மேலும் பர்குணா, நரைல், சிராஜ் கன்ஸ் மற்றும் போலோ போன்ற மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கதேச எல்லை மற்றும் இந்தியாவின் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியே இன்று காலை 6 மணிக்கு பின் இந்த சூறாவளி ஆனது கடந்து செல்லும் என கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |