வங்காளதேச ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்காளதேசம் அருகே உள்ள ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
இந்த படகு அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் கவிழ்ந்ததா? அல்லது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கவிழ்ந்ததா என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.