வங்கதேச படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் பிரசித்தி பெற்ற போதேஸ்வரி கோவிலுக்கு ஹிந்து பக்தர்களே ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 68 பேர் பலியாகி உள்ளனர். இது பற்றி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேசியபோது கொரோட்டா நதியில் ஞாயிற்றுக்கிழமை படகு விபத்து ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்பு பணிகளில் மேலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இது தவிர விபத்திற்கு பின் மாயமான 20 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வங்கதேசத்தின் வஞ்சகர் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான போதேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவிலுக்கு சென்ற விசைப்படகு ஒன்று நதியில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் விபத்து நேரிட்ட போது அந்த படகில் 150 பேர் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.