Categories
உலக செய்திகள்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் அதிரடி தீர்ப்பு..!! 14 பேருக்கு மரண தண்டனை ..!!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது 

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை  கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி 2000த்தில்  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்து கொலை செய்வதற்காக பயங்கரவாதிகள் சுமார் 76 கிலோ எடைகொண்ட வெடி பொருளை பதுக்கி வைத்தனர் .தேர்தல் பிரச்சார கூட்டம் என்பதால் போலீஸ் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். அதன் பிறகு மேற்கொண்ட விசாரணையில் இதுதொடர்பாக 9 பேர்  கைது செய்யப்பட்டு மேலும் 5 பேர் தலைமறைவாகினர்.

இந்நிலையில் நேற்று பிரதமரை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்குமாறு அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் அனுமதியுடன்  நிறைவேற்ற உத்தரவிட்ட நீதிபதி தலைமறைவானவரை கைது செய்து அல்லது சரணடையும் நிலையில் அவர்களுக்கான தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |