வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியா வருகின்றார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியா வருகின்றார். அவர் 5- ஆம் தேதி முதல் 8- ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். 5-ந்தேதி அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகின்றார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், எல்லை பிரச்சினை ராணுவம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஷேக் ஹசினா, பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தயுள்ளார். மேலும் இந்த பயணத்தின் போது இந்திய தலைவர்கள் பலரையும் ஷேக்ஹசீனா சந்திக்கயுள்ளார்.