Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்கதேச வீரர்களுக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள் …!!

இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கைகலப்பு ஏற்பட்ட்து.

13-வது இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் தொடங்கியது. பயமரியா இளசுகளின் அதிரடி ஆட்டத்தால் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா – வங்கதேச அணிகள் இறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியனான இந்தியா கத்துக்குட்டியான வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அசத்திய வங்கதேசம் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் (டக்வொர்த் லூயிஸ் விதிப்படி) வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கோப்பையைக் கைப்பற்றிய சந்தோஷத்தில் வங்கதேச வீரர்கள் ஆக்ரோஷமாக  துள்ளிக்குதித்தபடி கொண்டாடினர். இந்திய வீரர்களோ வங்கதேச வீரர்களின் சந்தோச துள்ளல் நிறைவு பெற்ற பின் அவர்களுக்கு கைகுலுக்குவோம் என  பொறுமையாக நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இந்திய வீரர்களிடம் வம்புச் சண்டைக்கு அழைத்தார். ஆனால் இந்திய வீரர்களோ அமைதியாக நின்று கொண்டிருக்க, மீண்டும் அதே வங்கதேச வீரர் இந்திய வீரர் ஒருவரை நெஞ்சை பிடித்து கீழே தள்ளினார்.

நிலை தடுமாறிய அந்த இந்திய வீரர் பதிலடி கொடுக்க, வங்கதேச வீரர் பேட்டை (கிரிக்கெட் மட்டை) வைத்து அடிக்க  முயன்றார். இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி மோத லுக்குத் தயாராக வங்கதேச வீரர்கள் தெறித்து  பின்வாங்கினர். பின்னர் நடுவர்கள், பயிற்சியாளர்கள் மோதலை தவிர்க்க கடுமை யாகப் போராடி இரு அணி வீரர்களையும் சமாதானப்படுத்தினர். பின்னர் ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

யார் மீது தவறு?

இந்த தொடரில் தொடக்கம் முதலே வங்கதேச வீரர்கள் ஒழுங்கீனமாக விளையாடினர். அதாவது எதிரணி பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தால் அவர்கள் முன் ஆக்ரோஷமாக கத்துவது, சீண்டுவது போன்ற செயல்களை அதிகம் செய்தனர். மற்ற நாட்டு வீரர்கள் வங்கதேச வீரர்களின் செயலை கண்டுகொள்ளவில்லை என்பதால் அவர்களுக்கு நன்கு குளிர் விட்டுப்போனது.   இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களிடம் தங்களது வேலையைக் காட்டினர்.

நடப்பு சாம்பியன் அணியைச் சேர்ந்தவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? இந்திய வீரர்கள் 200%-க்கும் அதிகளவில் பதிலடி கொடுக்க வங்கதேச வீரர்கள்  மிரண்டனர். பின்னர் வெற்றி பெற்ற களிப்பில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் கடைசியாக மோதலை அரங்கேற்றியுள்ளனர். இதுதான் பிரச்சனைக்குக் காரணம்.

ஐசிசி நடவடிக்கை எடுக்குமா?

இந்திய – வங்கதேச வீரர்களின் மோதல் சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (ஐசிசி) இன்னும் புகார் கடிதம் பறக்கவில்லை. இந்திய அணி நிர்வாகம் அல்லது நடுவர்கள் தான் புகார் கடிதம் அனுப்புவார்கள். இன்னும் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கவில்லை என தெரிகிறது. ஒரு வேளை இந்த மோதல் சம்பவம் குறித்து ஐசிசி-க்கு புகார் கடிதம் பறந்தால் வங்கதேச வீரர்கள் மீது கண்டிப்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் வருங்கால தூண்கள் என்பதால் தண்டனை அளவு குறைவாகத்தான் இருக்கும்.

Categories

Tech |