Categories
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் அடங்காத கொரோனா… ஒரே நாளில் 2,868 பேர் பாதிப்பு…!!!

வங்காளதேசத்தில் ஒரேநாளில் மட்டும் 2,868 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகில் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புக்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.87 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,868 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,87,959 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்ததை, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,822 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் கொரோனாவில் இருந்து 1.68 லட்சத்துக்கும் மேலானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது.

Categories

Tech |