Categories
உலக செய்திகள்

வங்காள தேசத்தின் விடுதலை பொன்விழா…. கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார் ஜனாதிபதி….!!

வங்காள தேசத்தின் விடுதலை பொன்விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை பெற்ற ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி நடக்கவிருக்கும் விழாவில் கலந்துகொள்ள அம்மாநில முதல்வர் அப்துல் ஹமீதின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக வங்காளதேசம் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் வங்காளதேசம் சென்ற ஜனாதிபதிக்கு 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் ஷேக் முஜிபுர் ரகுமான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று விடுதலை பொன் விழா நடைபெற இருக்கிறது இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். அதன் பின்னர் நடக்க இருக்கும் வெற்றி நாயகர்கள் என்ற நிகழ்ச்சியில் வங்கத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரகுமான் அவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான நாளை வங்காளதேசத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட காளி கோயிலை அவர் திறந்து வைக்கிறார் பின்னர் அன்றைய தினமே ஜனாதிபதி டெல்லி திரும்புகிறார்.

Categories

Tech |