வங்காள விரிகுடாவில் வங்கதேசத்தின் ஹதியா அருகே சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்காள விரிகுடா பகுதியில் 2,000 டன் கோதுமையை ஏற்றிச் சென்ற கப்பல் வங்கதேசத்தின் படேங்கா கடல் கடற்கரையில் இருந்து 400 கடல் தொலைவில் இருக்கின்றன ஹதியா அருகே மூழ்கியது. அதில் ‘ எம்.வி.அத்தர் பானு’ என்ற கப்பலில் இருந்த 13 மாலுமிகளை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்த கடலோர காவல்படை மற்றும் கடற்படை ஆகியவை தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் காலநிலை மிகவும் மோசமாக இருப்பதால் மீட்பு குழுவினரால் அந்த இடத்தை அடைய முடியவில்லை என்று கூறியுள்ளனர். சர்க்கரையை ஏற்றிச் சென்ற மற்றொரு கப்பல் சனிக்கிழமை அன்று அதே நேரத்தில் பாஷஞ்சர் அருகே மூழ்கிய நிலையில், தற்போது அதன் குழு உறுப்பினர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.