Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் கடன் விதிகளில் புதிய மாற்றம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

வங்கிகளின் கடன் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இயக்குநர்களுக்கான தனிநபர் கடனின் வரம்பை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது இந்த புதிய விதியின் கீழ், வங்கிகளின் இயக்குநர்கள் குழு  மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான கடன் வரம்பு ரூ .5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வங்கி இயக்குனர்களுக்கு தனிப்பட்ட கடன் வரம்பு ரூ .25 லட்சமாக இருந்தது.

இது குறித்து ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வங்கிகள் தங்கள் சொந்த வங்கி அல்லது பிற வங்கிகளின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் அல்லது பிற இயக்குநர்கள் ஆகியோரின் கணவன் / மனைவி மற்றும் அவர்களை சார்ப்துள்ள குழந்தைகளைத் தவிர வேறு எந்த உறவினருக்கும் ரூ .5 கோடிக்கு மேல் கடன் வழங்க அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. மனைவி மற்றும் சார்புடைய குழந்தைகளைத் தவிர பிற உறவினர்கள் ஒரு கூட்டாளராகவோ, முக்கிய பங்குதாரராகவோ அல்லது இயக்குநராக இருக்கும் எந்தவொரு நிறுவனத்துக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர்களுக்கு, ரூ.25 லட்சம் அல்லது ரூ.5 கோடிக்குக் குறைவான கடன் வசதிகளுக்கான திட்டங்களை மட்டுமே அதிகாரசபை அங்கீகரிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் அனைத்து ஆவணங்களுடனும் போர்டில் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் வங்கி போர்ட் அதைத் தீர்மானிக்கும். கடன் பெற பதவியை தவறாக பயன்படுத்துவது குறித்த பல வழக்குகள் இதற்கு முன்னரே வந்துள்ளன.

தற்போதைய இயக்குநர்கள் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதற்கான நிலையை தவறாக பயன்படுத்தியுள்ளனர். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தா கோச்சர் முதல் பல பெரிய நபர்கள் மீது வீடியோ கான் நிறுவனத்திற்கு 3250 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்காக தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி இப்போது இந்த விஷயத்தில் அதிக கண்டிப்பைக் காட்டி வருகிறது.

Categories

Tech |