தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் காசோலை பரிவர்த்தனைகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக ஐடிபிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 1ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 20 செக் லீப் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அதைத் தாண்டினால் லீப் ஒன்றுக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் சப்கா சேவிங் அக்கவுண்ட் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.