இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டு கடன் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது .அதனால் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் போன்றவற்றிற்கு வட்டி விகிதங்கள் உயர்வதோடு மாதம் தோறும் கடன்களுக்கு கட்டப்படும் EMI தொகையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி வீட்டுக் கடன்களுக்கான EBLRயை கடந்த ஆகஸ்ட் முதல் உயர்த்தியுள்ளது.அதன் வட்டி விகிதங்கள் 7.55 % + CRP + BSP லிருந்து 8.05%+ CRP+ BSP ஆக உயர்த்தப்பட்டுள்ளன. வங்கிகளின் ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் 7.15 % + CRP லிருந்து 7.65% + CRP ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி, எம்சிஎல்ஆர் விகிதம் 7.65 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு 7.80 சதவீதமாகவும், 6 மாதங்களுக்கு புதிய கட்டணங்கள் 7.95 சதவீதமாகவும் மாற்றியமைக்கப் பட்டுள்ளது. பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.05% முதல் 0.20 % வரை உயர்த்தியுள்ளது. ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட் அதிகரித்துள்ளதால் சில்லறை கடன்களுக்கு 7.95 சதவீதமாக உள்ளது.
கனரா வங்கி அதன் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அல்லது 7.80% லிருந்து 8.30% ஆக உயர்த்தியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி வெளிப்புற அளவுகோல் என்பது இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 7.90 சதவீதமாக உயர்த்தியது. கடந்த ஆகஸ்ட் 8 முதல் 7.40 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.