ஏப்ரல் 18-ம் தேதி அன்று சுமார் 14 மணி நேரம் இந்த சேவை நிறுத்தப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒரு வங்கியின் கணக்கிலிருந்து மற்றொரு வங்கியின் கணக்கிற்கு உடனடியாக பணத்தை அனுப்பவும், பெறவும் செய்கின்ற வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதனை RTGS பரிமாற்றம் என்று அழைப்போம். இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று சுமார் 14 மணி நேரம் இந்த சேவை நிறுத்தப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தொழில்நுட்பத்தை மேம்படுத்துகின்ற காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணி வரை சுமார் 14 மணி நேரம் இந்த சேவை நிறுத்தப்பட்டிருக்கும். இருப்பினும் NEFT சேவைக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.