ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் பண்டிகை காலங்களில் அதிகமாக வருவதால் ஒவ்வொரு மாநிலத்தைப் பொருத்து 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 14-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி சேவை இருந்தால் வங்கி நாட்களில் முடித்துக் கொள்ளவும். ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் பயன்பாட்டில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது என ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.