Categories
தேசிய செய்திகள்

வங்கிகள் கடன் கொடுக்கவில்லையென்றால்… புகார் கொடுக்கலாம்… நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்..!!

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுத்தால் புகார் அளிக்கலாம் என நிர்மலா சீதாராமன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, உணவகம் தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கொரோனா தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளன. அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் அல்லது கடன் தவணை செலுத்தும் கால அவகாசத்தை அதிகப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இத்தகைய கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொள்ளும். அவசர கால கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு பெரும் சிக்கல் ஏற்படுவதாக இந்தக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூறியுள்ளனர். அத்தகைய திட்டத்தின்கீழ் கடன் வழங்க வங்கிகள் மறுக்கக்கூடாது. அவ்வாறு மறுப்பு தெரிவித்தால் அது பற்றி புகார் அளிக்கலாம். நான் கவனிக்கிறேன். மேலும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் முடிவெடுக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |