ராமநாதபுரத்தில் வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ,வங்கி ஊழியர்கள் மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ,அரசுடமை வங்கி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்ட்ரல் வங்கி உதவி மேலாளரான சிவகுமார் தலைமை தாங்கி நடத்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் செயல்பட்டன .
ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் வங்கியிலுள்ள 145 லட்சம் கோடி மக்களின் சேமிப்பு பணத்தை, கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை கண்டித்தும் முழக்கங்கள் இட்டனர். பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனில் வரவு வைத்ததால், ஏற்பட்ட நஷ்டத்தினால் மத்திய அரசாங்கம் வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதன் காரணமாக வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்று 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.