இந்தியாவில் ரூ.3 கோடிக்கு மேற்பட்ட வங்கிக் கடன் மோசடி வழக்குகளை கண்காணிக்க புதிய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கு முன்பு ரூ.50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கி கடன் வழக்குகள் மட்டுமே நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இதனை ரூ.3 கோடிக்கு நிர்ணயித்து மத்திய பொருளாதார குற்றங்கள் கண்காணிப்பு ஆணையம் சிவிசி இதற்கான சட்டவிதிகளை திருத்தியுள்ளது.
இதன் மூலம் வாராக் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும். அதனை தொடர்ந்து நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை எடுத்துக் கொண்டு கடன் வாங்கியவர்கள் மீது முடிவு எடுக்கப்படும். மேலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்ற பொதுத்துறை வங்கிகளின் கோரிக்கையும் இந்த நிபுணர் குழுவால் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.