ரிசர்வ் வங்கி கடன் செலுத்துவதில் உள்ள வட்டி வீதத்தில் சில மாற்றங்களை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது, உலகிலேயே அதிவேகத்தில் பொருளாதாரம் வளர்வது இந்தியாவில் தான் என சர்வதேச நிதியத்தின் கணிப்பின்படி கூறியுள்ளார். மேலும் பொருளாதாரத்தில் இந்தியா ஆண்டுக்கு ஆண்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதனையடுத்து தற்போதைய பணப்புழக்கத்தை அதே நிலையில் வைத்திருக்க ரிசர்வ் வங்கி பல்வேறு முடிவுகளை செய்துள்ளது. இந்த நிலையில் வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக இருக்கும் மற்றும் வீடு ,வாகனங்களுக்கான கடன்களின் வட்டி விகிதம் அதே நிலையில் நீடிக்கும். மேலும் ரிசர்வ் வங்கியின் வங்கிகள் செய்யும் டெபாசிட்களுக்காக வழங்கும் வட்டி விகிதம் 3. 35% என்ற நிலையிலே தொடரும் என தெரிவித்தார்.