Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கிக்கு கொண்டுவந்த பணம்…. கட்டிக் கொடுத்த மெஷின்…. சிக்கிய வாலிபர்…!!

வங்கி கணக்கில் கள்ளநோட்டுக்கள் கலந்த  பணத்தை டெபாசிட் செய்ய வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்  கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் பொள்ளாச்சி – கோவை சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கிக்கு ரூ. 2 லட்சம் பணத்தை  செலுத்துவதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கேஷியரிடம் கொடுத்துள்ளார். கேஷியர் அந்த பணத்தை எந்திரத்தில் வைத்து எண்ணி பார்த்தபோது அவருக்கு சில ரூபாய் நோட்டுகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வங்கி மேனேஜர் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வங்கிமேனேஜர் மற்றும்  ஊழியர்கள் சேர்ந்து ரூ. 2 லட்சம் பணத்தை வாங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் 14 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து வங்கி மேனேஜர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |