Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் வெளியே தள்ளிய 500 ரூபாய் நோட்டுகள்…. ஸ்கேன் செய்த அதிகாரிகள்…. வெளியான திடுக்கிடும் உண்மை…!!!

கோவையில் தனியார் வங்கி ஒன்றில் இன்ஜினியர் ஒருவர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கப்பக்கொடை நாடு அடுத்துள்ள நஞ்சநாடு பகுதியில் ஹிந்தேஸ் ஆனந்த் (33) என்பவர் வசித்து வருகிறார். அவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையை அடுத்துள்ள வடவள்ளி அருகே ஓணம் பாளையம் என்ற பகுதியில் 15 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை பார்ப்பதற்காக ஆனந்த் நேற்று முன்தினம் கோவை சென்றுள்ளார். அப்போது ஒரு பையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றார். கோவை சென்ற அவர் தனது பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதற்காக வடவள்ளியில் இருக்கின்ற ஒரு தனியார் வங்கிக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்று அவரிடம் வங்கி ஊழியர்கள் ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை செலுத்துங்கள் என்று கூறியுள்ளனர். அவர் அங்குசென்று ஏடிஎம் எந்திரத்தில் தன்னிடமிருந்த பணத்தை செலுத்தினார். அதில் ஒரு லட்சம் ரூபாய் அவருடைய கணக்கில் வரவு செய்யப்பட்டது. ஆனால் மீதமிருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தையும் ஏடிஎம் எடுத்துக் கொள்ளாமல் வெளியே தள்ளி உள்ளது. அதனைக் கண்ட ஆனந்த் உடனே வங்கி காசாளரிடம் சென்று, தன்னிடம் இருக்கின்ற 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இந்திரம் ஏற்கவில்லை. அதனை தன்னுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

அதனைக் கேட்ட வங்கி காசாளர் உடனே அந்த 500 ரூபாய் நோட்டுகளை கருவியின் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி வங்கி துணை மேலாளர் கோகுல்நாத் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக போலீசார் வங்கிக்கு விரைந்து சென்றனர். அப்போது ஆனந்த் எப்படி கள்ளநோட்டுகள் கொண்டு வந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஆனந்த்  ஊட்டியை சேர்ந்த மதன்லால் என்ற நபரிடம் அந்த பணத்தை கடனாக வாங்கி வந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரிடம் இருந்த கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மதன்லால் என்ற நபரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் ஆனந்தை ஊட்டிக்கு அழைத்து சென்று உள்ளனர். அங்கு மதன்லால் என்ற நபரிடம் விசாரணை நடத்தினால்தான் கள்ளநோட்டை எப்படி வந்தது என்று உண்மை தெரியவரும்.

Categories

Tech |