Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற பெண்…. கவரிங் நகையை பறித்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெடுங்குளத்தில் சுடலை கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாப்பா நாங்குநேரியில் இருக்கும் வங்கிக்கு செல்வதற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக தனது மாடுகளை தோட்டத்தில் கட்டிப் போட்டுவிட்டு குளக்கரை வழியாக பாப்பா பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி பாப்பா அணிந்திருந்த கவரிங் சங்கிலி, வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து பாப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாத்தான்குளத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவரை கைது செய்து, மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |