Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற மூதாட்டி…. பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் அருகே நல்லூர் கிராமத்தில் சந்தானம்  [82] என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் பகுதியில் இருக்கும் ஒரு வங்கிக்கு பேருந்தில் சென்றுள்ளார். இவர் திரும்பி வரும் வழியில் பேருந்தில் மர்ம நபர் ஒருவர் சந்தானத்தின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.

இதை மூதாட்டி கவனிக்காமல் இருந்துள்ளார். இவர் நல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது கழுத்தில் இருந்த சங்கிலி காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சந்தானம்  சுசீந்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |