Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற 5 நபர்கள்…. ரூபாய் 1 கோடிக்கான காசோலை…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

போலியான காசோலையை பயன்படுத்தி வங்கியில் பணம் எடுக்க முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை-திருச்சி சாலையில் தனியார் வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த வங்கிக்கு வந்த 5 பேர் டெல்லியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரில் 1 கோடியே 34 லட்சத்து 23 ஆயிரத்து 482 ரூபாய்க்கான காசோலையை கொடுத்து பணம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து வங்கி மேலாளர் அந்த காசோலையை அல்ட்ரா பரிசோதனை கருவியில் வைத்து சோதித்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர்கள் பெரிய தொகைக்கான காசோலையை கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பீளமேடு பகுதியில் வசிக்கும் செந்தில்குமார், ஸ்ரீஹரி, ராஜ், பார்த்திபன் மற்றும் சுதீஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |