வங்கிக்கு 72 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோட்டை பகுதியில் கில்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி அதிகாரி கேட்டுக்கொண்டபடி 25 ஆயிரம் ரூபாய் வீதம் 48 தவணைகளில் சேர்த்து முடிக்கும் டெபாசிட் திட்டத்தில் இணைந்தார். அதற்கு 6.85 சதவீதம் வட்டி கிடைக்கும் என வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கில்லஸ் சில தவணைகளை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனையடுத்து வங்கிக்கு சென்று கடைசித் தவணையை செலுத்த முயன்ற போது தவணையை செலுத்த முடியாது எனவும், கணக்கு முடிக்கப்பட்டு லாக்அவுட் செய்யப்பட்டதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் முதிர்வு தொகையை விட குறைவான தொகை தான் கிடைக்கும் என கூறியதால் அதிர்ச்சியடைந்த கில்லஸ் நுகர்வோர் அமைப்பு மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கில்லஸ் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 72,381 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் வழக்கு தொடர்ந்த நாள் முதல் இந்த தொகைக்குரிய 6 சதவீத வட்டி, வழக்கு செலவு தொகை 5,000 ரூபாய் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.