Categories
தேசிய செய்திகள்

வங்கியின் லோன் வாங்கி சொந்த வீடு வாங்குவோர் கவனத்திற்கு….. இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

வங்கிலோன் வாங்கி சொந்த வீடு வாங்குபவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அது என்னென்ன என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

சொந்த வீடு வாங்குவது, கட்டுவது என்பது பலரின் கனவு. பெரும்பாலான மக்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குகிறார்கள். வீட்டுக்கான மொத்த செலவில், வீட்டுக்கடன் மூலம் 75-90% வரை நிதி உதவி கிடைக்கிறது. பல வங்கிகளும் வீட்டுக் கடன் வசதியை வழங்கி வருகின்றன. உங்களின் வருமானம், வீட்டின் மதிப்பு, கிரெடிட் ஸ்கோர், உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உங்களுக்கான கடன் தொகை தீர்மானிக்கப்படும். வீட்டுக் கடன் என்பது நீண்ட காலக் கடன். மாதா மாதம் கணிசமான தொகையை பல ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.

வீடு வாங்குபவர்கள் தாங்கள் வாங்கும் சொத்துக்கு தேவையான சான்றிதழ்கள், சட்ட ஆவணங்கள் மற்றும் உள்ளூர் அனுமதிகள் உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால், சொத்து ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (RERA) பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் உங்கள் வீட்டுத் திட்டம் தாமதமானாலோ அல்லது கட்டுமானத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ RERAவில் பதிவு செய்யப்படும் போது பாதுகாப்பு கிடைக்கும்.

750 அல்லது அதற்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் இருப்பது சிறந்தது. வங்கி கடன் வாங்க அதிக கிரெடிட் ஸ்கோர் இருப்பது அவசியம். இது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் வலுவாக இருப்பதைக் குறிக்கிறது. இதனால் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். நீங்கள் சொத்தை வாங்கும்போது நீங்கள் செலவழிக்க வேண்டிய தொகை, நீங்கள் சொன்ன தொகையிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். புதிய சொத்து வாங்குவதில் வேறு பல செலவுகள் உள்ளன. முத்திரைக் கட்டணம் (5-7%), பதிவுக் கட்டணம் 1-2%, பராமரிப்புக் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் அனைத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது செலுத்தப்படும். மேலும் ரூ.45 லட்சத்துக்கும் குறைவான விலையுள்ள வீடுகளுக்கு 1 சதவீதமும் ரூ.45 லட்சத்துக்கு மேல் உள்ள வீடுகளுக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அத்தகைய செலவுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

Categories

Tech |