Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

வங்கியிலேயே தூக்கில் தொங்கிய பெண் மேலாளர்.. என்ன காரணம்..? சிக்கிய கடிதம்..!!

கேரளாவில் பெண் வங்கி மேலாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் இருக்கும் கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் தோக்கிலங்காடி கனரா வங்கியில்  ஸ்வப்னா என்ற 38 வயது பெண் கிளை மேலாளராக உள்ளார். இந்நிலையில் ஸ்வப்னா திடீரென்று நேற்று முன்தினம் வங்கியிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். அப்போது வங்கியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் காலை 9 மணியளவில் பணிக்கு வந்துள்ளார்.

அங்கு ஸ்வப்னா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ந்துபோனார். இதனைத்தொடர்ந்து பிற ஊழியர்களும் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் விரைவாக வந்து அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் அதற்குள் உயிரிழந்துவிட்டார்.

அதன் பிறகு அவரின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து காவல்துறைக்கு ஸ்வப்னா கைப்பட எழுதிய கடிதத்தை கண்டறிந்துள்ளனர். அதில் ஸ்வப்னா அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார். மேலும் தற்கொலை செய்துகொண்ட ஸ்வப்னாவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். எனவே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |