பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்ட மக்கள் வருமான சான்றிதழ் பெற தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் மத்திய அரசின் சிறந்த திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வங்கிகளின் மூலம் கடன் கொடுத்து வீடுகள் கட்டித் தரப்படுகிறது. எனவே மக்கள் வீடு கட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்காக வருமான சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட வருமான சான்றிதழ் பெற முடியாதவர்களுக்கு வங்கி விதிகளுக்கு உட்பட்டு கடன் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது மக்களில் பெரும்பாலானோர் அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு சான்று பெறுவது கடினமாக உள்ளது எனக்கூறி கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.