ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எம்.பி.டி சாலையில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இங்கு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாடியில் இருந்த ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்ததால் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.