அரசு பொதுவுடைமை வங்கியில் திருட முயன்ற சிறுவன் உள்பட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியல் அரசு பொதுவுடைமை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து வங்கியில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வங்கியில் இருந்த பாதுகாப்பு அறையை திறக்க முடியாததல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்செங்கோடு காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திருச்செங்கோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மாங்குட்டைபாளையத்தை சேர்ந்த 18வயது சிறுவன் மற்றும் சரவணகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் திருட்டு செல்போன்கள் இருந்துள்ளது. இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்குபிடி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் சரவணகுமார் மற்றும் சிறுவர் இருவரும் இணைந்தது அரசு பொதுத்துறை வங்கியில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் சரவணகுமார் மற்றும் சிறுவன் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சிறையில் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சரவணக்குமாரை ராசிபுரம் சிறையிலும், சிறுவனை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்துள்ளனர்.