Categories
உலக செய்திகள்

வங்கியில் பணம் செலுத்த…. மக்கள் தயக்கம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பொருளாதார மந்த நிலையினால் சீனா நாட்டு வங்கிகளுக்கு 300 மில்லியன் டாலர் இழப்பு. 

சீன  நாட்டில் உள்ள மக்கள் தங்கள் சேமிப்புகளிடமிருந்து பணம் எடுக்க எடுக்க கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் வங்கிகளில் பணத்தினை டெபாசிட் செய்யாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன எவர்கிராண்ட் குரூப் எனும் நிறுவனம் அந்நாட்டின் மிகப்பெரிய வீட்டு வசதி மேம்பாடு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஜூலை மாதத்திற்குள் மறு கட்டடமைப்பு குறித்த திட்டத்தினை அறிவிப்பதாக கூறியிருந்தது.

அதனை குறிப்பிட்ட நேரத்தில் செய்யதவறியதால் மக்களுக்கு அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை இழந்துள்ளது. எவர்கிராண்ட் நிறுவனத்திற்கு 300 மில்லியன் டாலர் கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. சீனாவின் 2 டிரில்லியன் யுவான் பணம் கட்டுமான தொடர்பான பணிகளில் தேங்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் இங்கு வணிகத்தில் 80 % கட்டுமான தொழில்களில் தான் உள்ளது    என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |